Websites

முதுகுடுமிப் பெருவழுதி

சென்னை

எமக்கு ஊர் இராஜபாளையம். சற்றே மீதமிருக்கும் பசுமை படர்ந்த மலைகள் சூழ்ந்த எளிய அழகிய சிறுநகரம் அது. இறக்குமதியான நவநாகரிகம் ஆங்காங்கே தலைகாட்டினாலும் பாரம்பரியப் பாசத்தை தம்மகத்தே இன்னும் கொண்டிருக்கும் மக்கள் எமர். எம் தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வுக்காலத்தை அறப் பணிகளில் கழிக்கிறார். தாய் குழந்தைகளுக்கு அறநெறி, நீதிக்கதைகள், இறைபக்தி ஆகியவற்றைப் பல்லாண்டுகளாகக் கற்பிக்கிறார். இறைவனடி சேர்ந்துவிட்ட எம் பாட்டனார் ஓய்வு பெற்ற ஆசிரியர். 60 ஆண்டுகள் இடைவிடாது சபரி மலைக்கு யாத்திரை சென்ற குருசுவாமி. இழை பிரியாத இறை நம்பிக்கையை வாழ்வின் அடிநாதமாகக் கொண்ட பரம்பரை எமது. இராஜபாளையத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து எமர் வாழ்வு சிறக்க வழிசெய்யும் நீர் காத்த ஐயன் எமது குல தெய்வம். அவர் 'வடிவுடைநாயகர்' என்பது நேரிலும் புகைப்படத்திலும் கண்டோர் கூறும் கருத்து. அவர் வரப்பிரசாதி என்பதற்கு வாழ்வோர் சாட்சி. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தைச் சிறப்பிக்கும் ஆச்சார்ய மஹா சந்நிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்தர் எம் குரு. யாம் திருவருளும் குருவருளும் கொண்டு பிறவிப் பெருங்கடல் நீந்தும் கடலோடி. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி எமக்கு. Service Delivery Manager. மேலும் Lean, Six Sigma வல்லுனன். அரசியல் கூர்நோக்கன், பொருளாதாரம் கற்றவன், ஆன்மிகம் அறிந்தவன் (இன்னும் அதில் தெளியவில்லை), தமிழ் ஆர்வலன், இன்னும் இன்னபிற ஆர்வங்கள் பல கொண்டவன்.

Find Me Online